Archive for the என் காதல் நிலா Category

என் காதல் நிலா

Posted in என் காதல் நிலா on ஒக்ரோபர் 17, 2007 by suthanx
suthan-9.JPG
ஆகாயத்தில் இருப்பது அந்த நிலா 
என் இதயதில் இருப்பது இந்த நிலா
எல்லோரும் ரசிப்பது அந்த நிலா 
என்னை மட்டும் ரசிப்பது இந்த நிலா
உயிரே இல்லாதது அந்த நிலா 
தன் உயிரே நான்தான் என்கிறது இந்த நிலா
எல்லோருக்கும் சொந்தம் அந்த நிலா 
எனக்கு மட்டும் சொந்தம் இந்த நிலா
நீல் ஆம்ஸ்றொங் தொட்டது அந்த நிலா 
நான் தொட விரும்புவது இந்த நிலா
இரவில் வருவது அந்த நிலா 
தினம்தோறும் என் நினைவில் இந்த நிலா
இதயமே இல்லாதது அந்த நிலா 
தன் இதயமே எனக்கு மட்டும்தான் என்கிறது இந்த நிலா
உலகிற்கே இருப்பது அந்த நிலா 
எனக்கு உலகமாய் இருப்பது இந்த நிலா
எல்லோர் கண்ணுக்குள்ளே தெரிவது அந்த நிலா 
என் நெஞ்சுக்குள்ளே வாழ்வது,இருப்பது,தூங்குவது,தவழ்வது
என் காதல் நிலா..!!! 
என்றும் காதலுடன் - சுதன்.