பிப்ரவரி, 2008 க்கான தொகுப்பு

காதலே …என் காதலே… !

Posted in *! என் காதலே !* on பிப்ரவரி 15, 2008 by suthanx
  தீர்க்கமாய் மறுக்கிறாய் நீ
  தாபமாய் தவிக்கறது மனது…  நீ சொல்லாமலே இருந்துவிடு
  நீ என்னைக்காதலிக்கிறாய் என்ற
  நினைப்பிலேயே இருந்துவிடுகிறேன்
  நீ சொல்லாமலே இரு….

  ஆம் அல்லது இல்லை
  என்பதை விட-உன்
  மெளனம் அழகாய் சொல்கிறது
  உன் காதலை…..

  வானம் நீர் தெளிக்க
  காகங்கள் பூபாளமிசைக்க
  நீ கோலமிட்டுக்கொண்டிருந்தாய்-
  என் கவிதை காட்சியாக்கப்பட்டது….

  நீ சொல்லாவிட்டாலும்
  ஊர் சொல்லும் நம் காதலை….

  என் கனவுக்குள் நீ
  உன் கண்களுக்குள் நான்
  நம் நடுவே காதல்
  யாருக்கும் புலப்படாமல்-
  பூவுக்குள் நுழையும் காற்றுபோல்…..

  காற்று இசையமைக்க
  பறவைகள் பாட்டிசைக்க
  மென்தூரலில் நாம் மரமொதுங்க…
  வானவில் பார்த்திருந்த அம் மாலையில்
  நீ காதலைச்சொன்னாய்
  உலகம் நிசப்தமானது…….
 

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

Advertisements

உன்னைத் தேடும் என் இதயம்..!!

Posted in *! இதயம் !*, Uncategorized on பிப்ரவரி 9, 2008 by suthanx
உன்னைத் தேடும் என் இதயம் தினம் கண்ணீர் வடிக்கின்றது
உன் எண்ணங்களை சுமந்த என் மனம் சோகங்களால் வாடி நிற்கிறது
ஒரு முறையாவது உன்னுடன் பேசக்கிடைக்காதா என்று – உன்
விழிகள் சந்திக்காத போதும் வார்த்தைகளாவது
எனை ஆறுதல்படுத்தாதா என.

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

கரை சேரா கவிதைகள்…!!

Posted in *! கரை சேரா!* on பிப்ரவரி 9, 2008 by suthanx

பக்கங்கள் கிறுக்குகிறேன் –
உன்னோடு பழகிய நினைவுகளை –
நினைவுகளை மீட்டுவதிலும்
தனி சுகம்

உன்னைப் பற்றி
நான் எழுதியவை
இன்னும் கரை சேரா
கவிதைகளாய்
தத்தளித்துக் கொண்டிருக்கின்றன..


என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

மனசு மட்டும்..!!

Posted in *! மனசு மட்டும் !* on பிப்ரவரி 1, 2008 by suthanx

ஜன்னலில் பார்கிறேன்
காய்கிறது நிலவு
என்னையும் அங்கே
அழைகிறது உறவு

யாடைகள் செய்து
பார்கிறது விண்மீன்
யாரையோ இங்கே
தேடுறது கண்மீன்

மனசு மட்டும்
மாறவே இல்லையே
மறுபடியும் மறுபடியும்
உன்னையே கேட்கிறது

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com