ஒக்ரோபர், 2007 க்கான தொகுப்பு

காதல்..!!

Posted in *! காதல் !* on ஒக்ரோபர் 27, 2007 by suthanx
பதின் ஜந்து வயதுக்குழப்பத்தில் விளைவது
பருவத்தில் காதல் வரும்
பழக்கத்தில் காதல் வரும்
பார்த்தவுடன் காதல் வரும்
பார்க்காமலே காதல் வரும்
பள்ளியிலே காதல் வரும்
கல்லூரியில் காதல் வரும்
கவர்ச்சியில் காதல் வரும்
உணர்ச்சியில் காதல் வரும்
சாலையில் காதல் வரும்
சந்திப்பில் காதல் வரும்
கண் வழியே காதல் வரும்
காத்திருப்பில் காதல் வரும்
இளமையில் காதல் வரும்
முதுமையில் காதல் வரும்
நட்பிலும் காதல் வரும்
பகையிலும் காதல் வரும்
அழகிலே காதல் வரும்
அறிவிலே காதல் வரும்
நெருக்கத்தில் காதல் வரும்
விருப்பத்தில் காதல் வரும்
காதல் எங்கு தோன்றுமென்று 
வேதத்திலும் சொல்லவில்லை
ஆகமங்களிலும் கூறவில்லை….!
ஆனால் பலவித வலியினை 
மனதிற்குள் தருவது என்பது உறுதி….!!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

Advertisements

என் செல்லமே..!!!

Posted in *! என் செல்லாமே !* on ஒக்ரோபர் 27, 2007 by suthanx
suthan-27.jpg
உனது தொலை பேசி அழைப்பை 
தினம் தினம் எதிர்பார்கின்றேன்..!
உன்னோடு பேசும் போது 
இவ் உலகையே மறந்துபோகிறேன்..!
உனது பேச்சின் இனிமை 
எனை தினம் உனை நினைக்க சொல்கிறதே
நான் பேசாமல் இருப்பது ஏன் தெரியுமா 
உன்னை பேச விட்டு நான் அதை ரசிக்கதான்..!
உனது சீண்டல்,புன்னகை,கவலை,அழுகை,கோபம் 
எல்லாமே எனை கொல்கின்றதே...!!
நேரம் போவது தெரியாமல் உன்னோடு 
பேசிக் கொண்டிருக்கையில் ஒரேயொரு கவலையெனக்கு
இந்த நேரம் ஏன் போகிறது என்ற கவலை 
ஆனால் விட்டால் வாழ் நாள் முலுவதும் 
உன்னுடன் நான் கதைத்து கொண்டு இருப்பேன் 
என் செல்லமே..!!!
என்றும் காதலுடன்   த.சுதன்

நம்பிகையுடன்..!!

Posted in *! நம்பிகையுடன்..! !* on ஒக்ரோபர் 27, 2007 by suthanx
suthan-16.jpg
கண்ணுக்குள் நீதான் - என் 
கனவுக்குள்ளும் நீ தான் 
கண் மூடி பார்த்தால் -என் 
ன் நெஞ்சுக்குள்ளும் நீதான்
உயிருள்ளும் நீதான் - என் 
உறவுகலும் நீதான் 
காதலும் நீதான் - என் 
காதலியும் நீதான் 
தேடி வந்தேன் என் உயிரே _ என்னை 
தேட விட்டு போகாதே

ஏங்குதடி என் மனம் - அதை 
தாங்கிடுமா? என் இதயம்
பிரிவு என்ற சொல் கூட வேண்டாமடி 
உயிரிலே கலந்த என் காதலியே..!!

என்றும் காதலுடன்  -  த.சுதன் 

என் இதயம்..!

Posted in *! என் இதயம் !* on ஒக்ரோபர் 21, 2007 by suthanx
suthan-20.jpg
என் இதயம் துடிப்பது உனக்காக, 
அதை நீ ஏன் புரிந்து கொள்ள மறுத்தாய்..?
என் சுவாசத்தில்  கலந்திருப்பது நீயடி, 
அதை நீ ஏன் உனர மறுத்தாய்...? 
  
என் இதயம் இருப்பது உன்னிடம், 
அதை நீ ஏன் காயப்படுத்த நினைக்கிறாய்..? 
  
நான் கண்ணீர் சிந்துவது உன்னால், 
அது தான் நீ விரும்புவது என்றால் சொல்லிவிடு..! 
  
வாழ்னால் முழுவதும் கண்ணீரில்  உருகி விடுகிறேன்..!
என்றும் காதலுடன்  -  த.சுதன் 

ஏன்…!!

Posted in *! ஏன் !* on ஒக்ரோபர் 18, 2007 by suthanx
suthan-246.JPG
எங்கிருந்து வந்தாய்?
என் சிரிப்பை சிதைப்பதற்கு!
எப்போது வந்தாய்?
என் சந்தோஷத்தை சாகடிப்பதற்கு!
எப்படி வந்தாய்?
என் மனதை உடைப்பதற்கு!
ஏன் வந்தாய்?
என் உயிரை எடுப்பதற்கு

என்றும் காதலுடன் – சுதன்.

தெரியுமா…?

Posted in *!தெரியுமா...? on ஒக்ரோபர் 18, 2007 by suthanx

suthan-25.JPG 

உன் படத்தையும் 
என் படத்தையும் 
வெட்டி ஜோடியாக 
ஒட்டி ரசித்தது 
உனக்குத் தெரியுமா?
உன் பெயரை 
என் பெயரோடு 
இணைத்து எழுதி 
ஆனந்தப்பட்டது 
உனக்குத் தெரியுமா?
உன் மேலுள்ள 
காதலால் என் 
கையை வெட்டி 
ரத்தத்தில் கவிதை 
எழுதியது 
உனக்குத் தெரியுமா?
இவை எதுவுமே 
தெரியாத உனக்கு 
என் காதலின் 
ஆழம் எங்கே 
தெரியப் போகிறது?
என்றும் காதலுடன் - சுதன்.

உன்னால்…!

Posted in *! உன்னால் !* on ஒக்ரோபர் 18, 2007 by suthanx

suthan-19.JPG 

உன்னால்
சந்தோஷங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!

உன்னால்
துக்கங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!

உன்னால்
சுகங்கள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!

உன்னால்
வலிகள் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!

உன்னால்
காதல் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!

உன்னால்
பிரிவு என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!

உன்னால்
ஏமாற்றம் என்றால்
என்ன என்று
அறிந்து கொண்டேன்!

என்றும் காதலுடன் – சுதன்.