எதற்காக..!!

Posted in Uncategorized on ஒக்ரோபர் 14, 2008 by suthanx

எதற்காகப் பிறந்தேன்

என்று தெரியவில்லை

அன்பு செலுத்த மறக்கும்

உனக்கு அன்பு செலுத்தவா?

நம்பிக்கையில்லாத உன் வாழ்வில்

நம்பிக்கை தான் வாழ்க்கை என்று

வாழ்ந்து காட்டவா?

யாருக்காகவும் இதுவரை கண்ணீர் வடித்ததில்லை

கல்மனம் கொண்ட உனக்காக

கண்ணீர் வடிக்கவா?

என் எதிர்காலத்திற்காக

கடவுளை வணங்கியதில்லை

உன் எதிர்காலம் நன்றாக

அமைய கடவுளை வணங்கவா?

இது என் காதலின் ஆரம்பமா?

இல்லை என் அன்பின் இறுதியா?

என்றும் காதலுடன் த.சுதன்.
suthans2007@yahoo.fr

Advertisements

உன்னை மறக்க தெரியாதே

Posted in Uncategorized on ஒக்ரோபர் 14, 2008 by suthanx

உன்னை மறந்தால் மறுபடி நினைப்பேனா?
தெரியவில்லை…
எனக்குதான் உன்னை மறக்கவேத் தெரியாதே!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

நீ

Posted in Uncategorized on ஒக்ரோபர் 14, 2008 by suthanx

நீ
நீ எனக்கில்லை என்றாலும்
என்னிடம் இருப்பதெல்லாம்
நீதான்

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

நம்ப முடியவில்லை

Posted in Uncategorized on ஒக்ரோபர் 14, 2008 by suthanx

உனது பார்வைகள்…..!
உனது சிரிப்புக்கள்…..!
உனது பேச்சுக்கள்…..!
உனது ஸ்பரிஸங்கள்…..!
உனது கோபங்கள்…..!
உனது சீண்டல்கள்…..!
உனது சில்மிஷங்கள்…..!
உனது தீண்டல்கள்…..!
உனது முத்தங்கள்…..!
உனது அணைப்புக்கள்…..!
உனது காதல்……!
அனைத்தும் நடிப்பா நம்ப முடியவில்லை என்னால்…..!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

நட்பு

Posted in Uncategorized on ஒக்ரோபர் 14, 2008 by suthanx

காரணம் இல்லாமல் கலைந்து போக
இது கனவும் இல்லை…..
காரணம் சொல்லி பிரிந்துபோக
அது காதலும் இல்லை
உயிர் உள்ளவரை இருக்கும்
நமது நட்பு அது…!!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

என்னவளே!

Posted in Uncategorized on ஒக்ரோபர் 14, 2008 by suthanx

என்னவளே! விலகி சென்றாய் என்றிருந்தேன்.
ஆனால், நீயோ விட்டு அல்லவா, சென்றிருக்கிறாய்
என்னிடத்தில் உன்னை……….!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

என் உயிர்

Posted in Uncategorized on ஒக்ரோபர் 14, 2008 by suthanx

மரண தண்டனையாய்
உன் பிரிவு என்னை தாக்கும் போது…!
எப்படி புரிய வைப்பேன் என் உயிர் நீ என்று..!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

நியாயமா?

Posted in Uncategorized on ஒக்ரோபர் 14, 2008 by suthanx

சில பொழுதுகள் மட்டுமே என்னுடன் இருந்து விட்டு
எத்தனையோ மாற்றங்களை தந்து..
அத்தனையும் ஏமாற்றமாய் விளைய விட்டது நியாயமா?

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

நினைவு

Posted in Uncategorized with tags on ஒக்ரோபர் 14, 2008 by suthanx

உன் நினைவை விலக முடியாமல்
இறந்து போன என் இதயம் மீதேறி
காலம் பயணித்துக் கொண்டு இருக்கின்றது
புதுப் புது மாற்றங்களோடு..

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

ந‌ட்‌பி‌ல் தோ‌ல்‌வி

Posted in Uncategorized on மே 17, 2008 by suthanx

எல்லோரும் அடைவது
காதல் தோல்விதான்
முதல் முறையாக
நான் அடைந்தேன்
நட்பில் தோல்வி!

என்னையும் நீயாக உணர்வாய்
என்று நான் நம்பினேன்
நீ பலவற்றை உணர்ந்தவ‌ள்
என்பதை அறியாமல்…

எனது நட்பின் ஆழம் அதிகம்
என நான் நம்பினேன்
உனது நட்பின் அகலம்
என்னவென்று அறியாமல்…

நான் யாரிடமிருந்தும்
சிரிப்பை பெற்றதில்லை…
எப்பொழுதும் சிரித்துக்
கொண்டே இருப்பதால்
அதில் எனக்கு பஞ்சமில்லை.

முதல் முறையாக உன்னிடமிருந்து
அழுகையை பெற்றேன்
அது என்னிடம் இல்லாமல்
இருந்ததால்…

நல்லதோ…
கெட்டதோ…
பிரிவின் சோகம்
என்பது எனக்கு மட்டும்தானே!

 

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

விதி செய்த பாவம்

Posted in Uncategorized on மே 6, 2008 by suthanx

நான் செய்த பாவம்
உன்னை சந்தித்தது..!!
நீ செய்த பவம்
என்னை  நேசித்தது..!!
விதி செய்த பாவம்
விளையாடிப் பார்த்தது..!!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

இதய வாசல் திறப்பாயா..!

Posted in *! இதய வாசல் !* on ஏப்ரல் 4, 2008 by suthanx

என்னவளே ஏன்
என்னை மறந்தாய்
என் இனியவளே ஏன்
என்னை பிரிந்தாய்

எங்கிருந்தாலும்
நீ வாழ்கவென
வாழ்த்திட என்
உதடுகள் அசைந்தாலும்

உள்ளம் ஊமையாய்
தினமும் அழுகிறதே
உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே
உயிரும் விடை பெற துடிக்கிறதே

உறக்கம் மறந்து போனதே
இரக்கம் காட்ட மாட்டாயா
இதய வாசல் திறப்பாயா..? 

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

காதலே …என் காதலே… !

Posted in *! என் காதலே !* on பிப்ரவரி 15, 2008 by suthanx
  தீர்க்கமாய் மறுக்கிறாய் நீ
  தாபமாய் தவிக்கறது மனது…  நீ சொல்லாமலே இருந்துவிடு
  நீ என்னைக்காதலிக்கிறாய் என்ற
  நினைப்பிலேயே இருந்துவிடுகிறேன்
  நீ சொல்லாமலே இரு….

  ஆம் அல்லது இல்லை
  என்பதை விட-உன்
  மெளனம் அழகாய் சொல்கிறது
  உன் காதலை…..

  வானம் நீர் தெளிக்க
  காகங்கள் பூபாளமிசைக்க
  நீ கோலமிட்டுக்கொண்டிருந்தாய்-
  என் கவிதை காட்சியாக்கப்பட்டது….

  நீ சொல்லாவிட்டாலும்
  ஊர் சொல்லும் நம் காதலை….

  என் கனவுக்குள் நீ
  உன் கண்களுக்குள் நான்
  நம் நடுவே காதல்
  யாருக்கும் புலப்படாமல்-
  பூவுக்குள் நுழையும் காற்றுபோல்…..

  காற்று இசையமைக்க
  பறவைகள் பாட்டிசைக்க
  மென்தூரலில் நாம் மரமொதுங்க…
  வானவில் பார்த்திருந்த அம் மாலையில்
  நீ காதலைச்சொன்னாய்
  உலகம் நிசப்தமானது…….
 

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

உன்னைத் தேடும் என் இதயம்..!!

Posted in *! இதயம் !*, Uncategorized on பிப்ரவரி 9, 2008 by suthanx
உன்னைத் தேடும் என் இதயம் தினம் கண்ணீர் வடிக்கின்றது
உன் எண்ணங்களை சுமந்த என் மனம் சோகங்களால் வாடி நிற்கிறது
ஒரு முறையாவது உன்னுடன் பேசக்கிடைக்காதா என்று – உன்
விழிகள் சந்திக்காத போதும் வார்த்தைகளாவது
எனை ஆறுதல்படுத்தாதா என.

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

கரை சேரா கவிதைகள்…!!

Posted in *! கரை சேரா!* on பிப்ரவரி 9, 2008 by suthanx

பக்கங்கள் கிறுக்குகிறேன் –
உன்னோடு பழகிய நினைவுகளை –
நினைவுகளை மீட்டுவதிலும்
தனி சுகம்

உன்னைப் பற்றி
நான் எழுதியவை
இன்னும் கரை சேரா
கவிதைகளாய்
தத்தளித்துக் கொண்டிருக்கின்றன..


என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

மனசு மட்டும்..!!

Posted in *! மனசு மட்டும் !* on பிப்ரவரி 1, 2008 by suthanx

ஜன்னலில் பார்கிறேன்
காய்கிறது நிலவு
என்னையும் அங்கே
அழைகிறது உறவு

யாடைகள் செய்து
பார்கிறது விண்மீன்
யாரையோ இங்கே
தேடுறது கண்மீன்

மனசு மட்டும்
மாறவே இல்லையே
மறுபடியும் மறுபடியும்
உன்னையே கேட்கிறது

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

என் கடைசி ஆசை…!

Posted in *!என் கடைசி ஆசை!* on திசெம்பர் 6, 2007 by suthanx

என் கடைசி ஆசை…!

நான் இறந்து விட்ட பிறகு..!

என் இதயத்தை எடுத்து இதயமே இல்லாத

என் காதலிக்கு கொடுங்கள்…!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

காலமெல்லாம் நீ வேண்டும்..!!

Posted in *! காலமெல்லாம் !* on நவம்பர் 10, 2007 by suthanx

காலமெல்லாம் நீ..வேண்டும்

என்னதான் இருக்கு உன்னிடம்
மீண்டும் மீண்டும்..சிந்தித்தால்
விடை தெரியவில்லை.
காரணம்…எதை என்று
சொல்வது
வாழ்க்கை ஒடும்போதும்
உன் நினைவுகள்தான்…
என் இதயத்துடிப்பில்
அதிகமாய் ஓடுகின்றது.
ஏன்…
என் நாடித்துடிப்பிலும் கூட
நீயே…தான் வாழ்கின்றாய்
சோகம் வாட்டும் போதும்.
ஓ… என்ன சோகம் என்கின்றாயா….?

உன்னை பிரிந்த சோகம்…
வாட்டும் போதும்.
உன் சுகமான நினைவுகள்
என்னை சுகமாக்கி…
செல்கின்றது.

என் செல்லமே..

இடை வெளி இல்லா..
மழை நீர்..போல்
என் வாழ்வில் நீ..வேண்டும்.

எப்பவும் எனக்கு சாலிக்காத..
பொருள்.. அது நீ..என்பதால்.
சலிப்பே…இல்லாமல்.
உன் இதழ் சிந்தும் கவிதையில்
காலமெல்லாம்.
நான் வாழ..என்னருகில்
நீ..வேண்டும்.

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

காத்திருப்பேன் என்றும் உனக்காக…!

Posted in *!காத்திருப்பேன் என் on நவம்பர் 10, 2007 by suthanx

நீ சொன்ன
அந்த ஒரு
வார்த்தை
எனக்குப் போதுமடி
காத்திருப்பேன் என்றும்
உனக்காக!

நீ சொன்னாய்
எப்பவும் எனக்காய்
காத்திருப்பேன் என
நம்புகிறேன் உன்னை!!

இனி நீ வருடங்கள்
பேசாவிட்டாலும் உன்
அந்த ஓர்
வார்த்தையில் வாழ்வேன்
என்றாவது நீ சொன்ன
அந்த சேரும் நாள்
வரும் வரை..

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

மனதில் நீ..!

Posted in *!மனதில் நீ!* on நவம்பர் 9, 2007 by suthanx

என்னை இழக்கப் போகிறேன்
உன்னை இழக்க முடியாமல்..!

நீயாக வந்தாய்
நான் நீயாக மறினேன் 
நீயாக விலகுகிறாய்
முடியாதடி உன்னை பிரிய
அடுத்த நிமிடமும்..!

நான் வாழ்வது சந்தேகமடி உயிரே
இன்னுமொரு நிமிடம் நான் வாழ்வது 
நீ என்னிடம் வருவாய் மீண்டும் என்று
உயிரே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே…!

மறக்க என்னால் முடிந்து இருந்தால்
மாண்டு போக முயற்சித்திருப்பேனே
மூன்று முறை முயற்சி செய்தும் முடியவில்லை என்னால்
முடிவில்லா துக்கத்தை முழுசாக அடைவதற்கு
செயற்கையின் சாவை செய்யவே மாட்டேன்
செய்துள்ளேன் சத்தியம் இயற்கையின் இறப்பை
இதயத்தால் ஏற்பேன் இன்றாவது வருமென்று
இறைவனே உனக்கும் இந்த ஏழையை
இன்னுமா பிடிக்கவில்லை
உன்னிடம் வருவதற்கு உயிரொன்று ஏங்குது இங்கு..!

மனதில் நீ!
உயிரில் நீ…!
உதிரத்தில் நீ…!
எல்லாமே உன்னோடு…..!
என் மரணத்தை தவிர..!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

TRUE LOVE

Posted in *!TRUE LOVE!*, Uncategorized on நவம்பர் 9, 2007 by suthanx

காலங்கள் தோறும் இது கதையாக போகும்
என் கண்ணிர் துளியில் ஈரம் வாழும்
நான் நானக இருந்திருபேன்
நீ நாமாக வாழ்வோம் என்றாய்
முடியாது என்று விலகினேன்
முடியும் என்று இணங்கினாய்
காதல் கொன்டேன் என் மீதுள்ள நம்பிகையால் அல்ல
உன் மீது உன் காதல் மேல் உள்ள நம்பிகையால் 

 இன்று  

முடியாது என்று கூறி சென்று விட்டாய்-ஆனல்
முடியதோ ஒரு போதும் என்று கூறி
தனிமையில் உன் நினைவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இதயம் வலிக்குதடி…!!!    

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

காதல்..!!

Posted in *! காதல் !* on ஒக்ரோபர் 27, 2007 by suthanx
பதின் ஜந்து வயதுக்குழப்பத்தில் விளைவது
பருவத்தில் காதல் வரும்
பழக்கத்தில் காதல் வரும்
பார்த்தவுடன் காதல் வரும்
பார்க்காமலே காதல் வரும்
பள்ளியிலே காதல் வரும்
கல்லூரியில் காதல் வரும்
கவர்ச்சியில் காதல் வரும்
உணர்ச்சியில் காதல் வரும்
சாலையில் காதல் வரும்
சந்திப்பில் காதல் வரும்
கண் வழியே காதல் வரும்
காத்திருப்பில் காதல் வரும்
இளமையில் காதல் வரும்
முதுமையில் காதல் வரும்
நட்பிலும் காதல் வரும்
பகையிலும் காதல் வரும்
அழகிலே காதல் வரும்
அறிவிலே காதல் வரும்
நெருக்கத்தில் காதல் வரும்
விருப்பத்தில் காதல் வரும்
காதல் எங்கு தோன்றுமென்று 
வேதத்திலும் சொல்லவில்லை
ஆகமங்களிலும் கூறவில்லை….!
ஆனால் பலவித வலியினை 
மனதிற்குள் தருவது என்பது உறுதி….!!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

காஷ்மீர் புல்வாமா வீரர்களே..!

Posted in Uncategorized on பிப்ரவரி 28, 2019 by suthanx

களம் கான சென்ற வீரனே
களப்பலி ஆனாயோ
கதிரவன் உனை கண்டும்
கண் மூடித்தான் போனானோ
நீ விதைத்த விதை
விருட்சமாய் வளரும்
உன் கனவை அவன் வெல்வான்
புல்வாமா அவன் புருவத்தில்
அழியாத புள்ளியாக
காஷ்மீரை உன் விழியில் காத்தாய்
காவலன் உன்னை கபடமாய் அழித்தானோ
உன் வீரம் எதிரி யறிந்ததால்
உன்னை எதிர்க்காமல் ஏய்தானோ
கண் மூடி நீ கல்லறையில்- உன்
கனவை நினைவாக்க களம்கான
காத்திருக்கும் பல கண்கள்
காத்திரு பகையே கவனமாய்
கனலாய் பாய்ந்து காவியம் படைப்போம்
திரும்பி நீ செல்லா துணிந்து நம் துப்பாக்கி
தீயாய் உன்னை துளைக்கும்
பழித்தவர் நீர் பாடையில் பயணிக்கும்
நாள் பரணியில் விரைவாய்.
விழித்திரு பகையே பழி தீர்க்க நாம் வருவோம்
பிப்ரவரி 14 காதலர் தினமல்ல எம் தேசம் காத்த வீரமறவர் நாள் அழியாத வரலாற்று நாள்.

ஜெய்ஹிந்த்…!

ஆக்கம் T.Suthan. SuthanS2007@yahoo.fr

சமூகம் ஒரு சகாப்தம்..!

Posted in Uncategorized on பிப்ரவரி 28, 2019 by suthanx

சுதன் என் காதல் நீ.!!

சமூக அவலநிலை சமூகத்தில்
உள்ள சாக்கடையினால் அல்ல
சாதி எனும் பெயரினால்
சாரீரம் பிரித்து பார்க்கும் சாதிப்பிரியர்
ஏழ்மையில் தவிப்போர் கரம் தாழ்ந்து போக
ஏகாதிபத்திய ஏமாற்றுவார் உள்ளவரை
ஏணியை பார்த்திட மட்டுமே ஏழை விழி
ஏறித்தான் முன்னேறிட முயன்றாள்
கரம் கொடுக்க முன்வருபவர் யார் இங்கே
மதப்பிரியர்கள் மானிட தர்மத்தை மறந்து
மத மாற்றத்தை செவிப்பறையில்
தெவிட்டா மொழியில் தென்றலாய் உபதேசிக்க
வறுமையினால் மாறித்தான் போகுது மனசு
கிடைப்பதோ அற்பம் இழப்பதோ தன்மானம்
உழைத்து வாழ வேண்டும் ஊரார் போற்ற
உழைக்க வலு உண்டு வழியை யார் காட்டுவார்
ஏழை ஏழைதான் என்றுமே – அது
எழுதி வைத்த வரலாறு.
சமூகத்தில் ஆயிரம் நடக்கும் – ஆனாலும்
நமக்கேன் பொல்லாப்பு என
ஓரமாய் ஒதுங்குபவர் பல பேர்
வேடிக்கை பார்ப்பவர்கள் விந்தை மனிதர்
விடியலுக்கு குடை பிடிக்கும்
குருட்டு சிந்தனைவாதிகள்.
சமூகம் சார்ந்து வாழ்ந்து பார்
சாக்கடையும் உனக்கு சாம்பிராணியே
ஒரு யுக வாழ்க்கைதான் வாழ்ந்துவிட்டு போ
சாதி மத பேதமற்ற சமூக நல் வாழ்க்கையை
சமூகத்தில் உன்னை சுட்டிக்காட்ட ஒரு
கரம் உயர்ந்தால் நீதான் சமூகவாதி சிந்தனைவாதி
நான் வாழ்வது வாழ்வல்ல- பிறரும்
என் போல் வாழ வேண்டும் என்பதே உன் மொழியாக உன்னுள் தீயாய் எரிய வேண்டும்.
இழந்தவனுக்கு தான் இழப்பின் அருமை
இயலாதவனுக்கு தான் பசியின் அருமை
இதை புரியாதவன் புரிந்து கொள்ளாதவன்
வாழ்வின் கடைசி நொடியில்…

View original post 15 more words

கண்ணீர் காதல்..!

Posted in Uncategorized on பிப்ரவரி 28, 2019 by suthanx

போதும் இந்த வாழ்க்கை
பொல்லாப்பே எனக்கு வாழ்வாகிப்போச்சு..
பொறுத்துப் பார்த்தேன் பொறுமை இழந்தேன்
போராடி பெற்றேன் இன்று போராட்டமே மிச்சம்..
பெண்மைக்குள் ஓர் ஆணவம் துளர்விட்டால்
பேரன்பை நான் எங்கே தேட…
பக்குவமாய் பல கதை கூறி இன்று
கதியற்று பாதையோரம் பயனின்றி…
சொல்லிற்கும் செயலுக்கும் விளக்கம் ஏது
சொன்னாலும் புரியாத பேதை இவன்….
புண்பட்ட மனம் புண்ணாகித்தான் போச்சு
புரிந்தும் புரியாத புதிரானாள் இவள்…
பூத்த பூ வாடுவது இயற்கை வரம்
பூவிழி கண்ணீர் மட்டும் எனக்கு செயற்கையா..?
கண்ணுக்கும் கண்ணீருக்கும் செந்தமானேன்
கானால் நீராய் காண்போர் யாரோ…
காத்திருக்கின்றேன் காலம் மாற
காணாமல்தான் போவேனோ காற்றோடு..
நினைவுகள் எனக்கு சொந்தமடி
நித்தம் நித்தம் செத்தே போகிறேன் உன்னால்…
மறக்கத்தான் நினைக்கின்றேன் ஆனால்
மாண்டாளும் முடியாது மறந்திடவே..
தீயினில் வேகுது தீயசிந்நை
தீர்ந்தேதான் போச்சு திகட்டயது…
தண்ணீரில் மிதக்கிறது செந்தாமரை
தண்ணியில் தள்ளாடுது உந்தன் பேரன்பு…
பூவுக்குள் ஒழிந்திருக்கும் பனித்துளி
பூவையவள் நெஞ்சில் நானெங்கே இன்று…
காலம் தான் மாறுமா இல்லை
கண்ணீர்தான் மிஞ்சுமா…
கடக்க நினைப்பது கரையை அல்ல
கனத்த இதயத்தின் வலியையே…
காரணம் ஆயிரம் காட்சியாக
கண்ட கனவோ நீர்க்குமிழியாக…
உடைந்தேதான் போச்சு மனசு
இனி ஒட்ட வைக்கத்தான் முடியுமா.?

ஆக்கம் T.Suthan.  Suthans2007@yahoo.fr

சமூகம் ஒரு சகாப்தம்..!

Posted in Uncategorized on பிப்ரவரி 28, 2019 by suthanx

சமூக அவலநிலை சமூகத்தில்
உள்ள சாக்கடையினால் அல்ல
சாதி எனும் பெயரினால்
சாரீரம் பிரித்து பார்க்கும் சாதிப்பிரியர்
ஏழ்மையில் தவிப்போர் கரம் தாழ்ந்து போக
ஏகாதிபத்திய ஏமாற்றுவார் உள்ளவரை
ஏணியை பார்த்திட மட்டுமே ஏழை விழி
ஏறித்தான் முன்னேறிட முயன்றாள்
கரம் கொடுக்க முன்வருபவர் யார் இங்கே
மதப்பிரியர்கள் மானிட தர்மத்தை மறந்து
மத மாற்றத்தை செவிப்பறையில்
தெவிட்டா மொழியில் தென்றலாய் உபதேசிக்க
வறுமையினால் மாறித்தான் போகுது மனசு
கிடைப்பதோ அற்பம் இழப்பதோ தன்மானம்
உழைத்து வாழ வேண்டும் ஊரார் போற்ற
உழைக்க வலு உண்டு வழியை யார் காட்டுவார்
ஏழை ஏழைதான் என்றுமே – அது
எழுதி வைத்த வரலாறு.
சமூகத்தில் ஆயிரம் நடக்கும் – ஆனாலும்
நமக்கேன் பொல்லாப்பு என
ஓரமாய் ஒதுங்குபவர் பல பேர்
வேடிக்கை பார்ப்பவர்கள் விந்தை மனிதர்
விடியலுக்கு குடை பிடிக்கும்
குருட்டு சிந்தனைவாதிகள்.
சமூகம் சார்ந்து வாழ்ந்து பார்
சாக்கடையும் உனக்கு சாம்பிராணியே
ஒரு யுக வாழ்க்கைதான் வாழ்ந்துவிட்டு போ
சாதி மத பேதமற்ற சமூக நல் வாழ்க்கையை
சமூகத்தில் உன்னை சுட்டிக்காட்ட ஒரு
கரம் உயர்ந்தால் நீதான் சமூகவாதி சிந்தனைவாதி
நான் வாழ்வது வாழ்வல்ல- பிறரும்
என் போல் வாழ வேண்டும் என்பதே உன் மொழியாக உன்னுள் தீயாய் எரிய வேண்டும்.
இழந்தவனுக்கு தான் இழப்பின் அருமை
இயலாதவனுக்கு தான் பசியின் அருமை
இதை புரியாதவன் புரிந்து கொள்ளாதவன்
வாழ்வின் கடைசி நொடியில் மின்னலாய் உணர்த்திச் செல்லும்.
வாழ் வாழ்ந்துபார் தனியாக அல்ல சமூகத்துடன் சகோதரத்துவத்துடன் தன்னிலை மறந்து..!

ஆக்கம் T.Suthan.   Suthans2007@yahoo.fr