என் எதிர்பார்ப்புக் தெரிவுக்கான தொகுப்பு

என் எதிர்பார்ப்புக்கள்…!

Posted in என் எதிர்பார்ப்புக் on அக்டோபர் 14, 2007 by suthanx
suthan-13.JPG 
நீ என்றும்
வரமாட்டாய் என்று
தெரிந்தும்
உன் வரவிற்காக
காத்திருக்கிறேன்..!


நீ என்னிடம்
பேச மாட்டாய் என்று
தெரிந்தும்
உன் ஒரு வார்த்தைக்காக
தவிக்கிறேன்..!

நீ என்னைக் காதலிக்க
மாட்டாய் என்று
தெரிந்தும்
உன் காதலுக்காக
ஏங்குகிறேன்..!

உனை நினைப்பதால்
எந்த பிரயோசனமும் இல்லை
என்று தெரிந்தும்
உன்னையே
நினைக்கிறேன்..!

என்றும் காதலுடன் - சுதன்.