காதலே …என் காதலே… !
தீர்க்கமாய் மறுக்கிறாய் நீ
தாபமாய் தவிக்கறது மனது… நீ சொல்லாமலே இருந்துவிடு
நீ என்னைக்காதலிக்கிறாய் என்ற
நினைப்பிலேயே இருந்துவிடுகிறேன்
நீ சொல்லாமலே இரு….
ஆம் அல்லது இல்லை
என்பதை விட-உன்
மெளனம் அழகாய் சொல்கிறது
உன் காதலை…..
வானம் நீர் தெளிக்க
காகங்கள் பூபாளமிசைக்க
நீ கோலமிட்டுக்கொண்டிருந்தாய்-
என் கவிதை காட்சியாக்கப்பட்டது….
நீ சொல்லாவிட்டாலும்
ஊர் சொல்லும் நம் காதலை….
என் கனவுக்குள் நீ
உன் கண்களுக்குள் நான்
நம் நடுவே காதல்
யாருக்கும் புலப்படாமல்-
பூவுக்குள் நுழையும் காற்றுபோல்…..
காற்று இசையமைக்க
பறவைகள் பாட்டிசைக்க
மென்தூரலில் நாம் மரமொதுங்க…
வானவில் பார்த்திருந்த அம் மாலையில்
நீ காதலைச்சொன்னாய்
உலகம் நிசப்தமானது…….
என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com