காலமெல்லாம் நீ வேண்டும்..!!
காலமெல்லாம் நீ..வேண்டும்
என்னதான் இருக்கு உன்னிடம்
மீண்டும் மீண்டும்..சிந்தித்தால்
விடை தெரியவில்லை. காரணம்…எதை என்று
சொல்வது
வாழ்க்கை ஒடும்போதும்
உன் நினைவுகள்தான்…
என் இதயத்துடிப்பில்
அதிகமாய் ஓடுகின்றது.ஏன்…
என் நாடித்துடிப்பிலும் கூட
நீயே…தான் வாழ்கின்றாய்சோகம் வாட்டும் போதும்.
ஓ… என்ன சோகம் என்கின்றாயா….?
உன்னை பிரிந்த சோகம்…
வாட்டும் போதும்.
உன் சுகமான நினைவுகள்
என்னை சுகமாக்கி…
செல்கின்றது.
என் செல்லமே..
இடை வெளி இல்லா..
மழை நீர்..போல்
என் வாழ்வில் நீ..வேண்டும்.
எப்பவும் எனக்கு சாலிக்காத..
பொருள்.. அது நீ..என்பதால்.
சலிப்பே…இல்லாமல்.
உன் இதழ் சிந்தும் கவிதையில்
காலமெல்லாம்.
நான் வாழ..என்னருகில்
நீ..வேண்டும்.
என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com