தெரியுமா…?

suthan-25.JPG 

உன் படத்தையும்
என் படத்தையும்
வெட்டி ஜோடியாக
ஒட்டி ரசித்தது
உனக்குத் தெரியுமா?
உன் பெயரை
என் பெயரோடு
இணைத்து எழுதி
ஆனந்தப்பட்டது
உனக்குத் தெரியுமா?
உன் மேலுள்ள
காதலால் என்
கையை வெட்டி
ரத்தத்தில் கவிதை
எழுதியது
உனக்குத் தெரியுமா?
இவை எதுவுமே
தெரியாத உனக்கு
என் காதலின்
ஆழம் எங்கே
தெரியப் போகிறது?
என்றும் காதலுடன் - சுதன்.

மறுமொழி இடுக

நீங்கள் உள் நுழைந்தால் மட்டுமே பின்னூட்டம் இட முடியும்.