கேட்டுப் பார்…!!!

suthan-2.JPG

 

காதலைச் சொல்லு முன்...! 
என் இதழ்களைக் கேட்டுப் பார்
என் நெஞ்சம் சொல்லும்!!! 
என் இமைகளைக் கேட்டுப் பார்
என் கனவுகள் சொல்லும்!!!
என் இதயத்தைக் கேட்டுப் பார்
என் ஆசைகள் சொல்லும்!!! 
என் இரவைக் கேட்டுப் பார்
உனக்கான என் காத்திருப்புக்களைச் சொல்லும்!!!
என் காதலை நீ மறுத்த பின்...! 
என் இதழ்களைக் கேட்டுப் பார்
என் நெஞ்சத்தின் வேதனை சொல்லும்!!!
என் இமைகளைக் கேட்டுப் பார்
என் கனவுகள் கலைந்த விதம் சொல்லும்!!! 
என் இதயத்தைக் கேட்டுப் பார்
என் ஆசைகள் சிதைந்த விதம் சொல்லும்!!! 
என் இரவைக் கேட்டுப் பார்
கண்ணீர் வடிக்கும்
என் உன் நினைவுகளைச் சொல்லும்!!!
என்றும் காதலுடன்
சுதன்.

மறுமொழி இடுக

நீங்கள் உள் நுழைந்தால் மட்டுமே பின்னூட்டம் இட முடியும்.