எதற்காக..!!

Uncategorized இதில் அக்டோபர் 14, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

எதற்காகப் பிறந்தேன்
என்று தெரியவில்லை
அன்பு செலுத்த மறக்கும்

உனக்கு அன்பு செலுத்தவா?

நம்பிக்கையில்லாத உன் வாழ்வில்
நம்பிக்கை தான் வாழ்க்கை என்று
வாழ்ந்து காட்டவா?

யாருக்காகவும் இதுவரை கண்ணீர் வடித்ததில்லை
கல்மனம் கொண்ட உனக்காக
கண்ணீர் வடிக்கவா?

என் எதிர்காலத்திற்காக
கடவுளை வணங்கியதில்லை
உன் எதிர்காலம் நன்றாக
அமைய கடவுளை வணங்கவா?

இது என் காதலின் ஆரம்பமா?
இல்லை என் அன்பின் இறுதியா?

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

உன்னை மறக்க தெரியாதே

Uncategorized இதில் அக்டோபர் 14, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

உன்னை மறந்தால் மறுபடி நினைப்பேனா?
தெரியவில்லை…
எனக்குதான் உன்னை மறக்கவேத் தெரியாதே!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

நீ

Uncategorized இதில் அக்டோபர் 14, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

நீ
நீ எனக்கில்லை என்றாலும்
என்னிடம் இருப்பதெல்லாம்
நீதான்

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

நம்ப முடியவில்லை

Uncategorized இதில் அக்டோபர் 14, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

உனது பார்வைகள்…..!
உனது சிரிப்புக்கள்…..!
உனது பேச்சுக்கள்…..!
உனது ஸ்பரிஸங்கள்…..!
உனது கோபங்கள்…..!
உனது சீண்டல்கள்…..!
உனது சில்மிஷங்கள்…..!
உனது தீண்டல்கள்…..!
உனது முத்தங்கள்…..!
உனது அணைப்புக்கள்…..!
உனது காதல்……!
அனைத்தும் நடிப்பா நம்ப முடியவில்லை என்னால்…..!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

நட்பு

Uncategorized இதில் அக்டோபர் 14, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

காரணம் இல்லாமல் கலைந்து போக
இது கனவும் இல்லை…..
காரணம் சொல்லி பிரிந்துபோக
அது காதலும் இல்லை
உயிர் உள்ளவரை இருக்கும்
நமது நட்பு அது…!!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

என்னவளே!

Uncategorized இதில் அக்டோபர் 14, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

என்னவளே! விலகி சென்றாய் என்றிருந்தேன்.
ஆனால், நீயோ விட்டு அல்லவா, சென்றிருக்கிறாய்
என்னிடத்தில் உன்னை……….!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

என் உயிர்

Uncategorized இதில் அக்டோபர் 14, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

மரண தண்டனையாய்
உன் பிரிவு என்னை தாக்கும் போது…!
எப்படி புரிய வைப்பேன் என் உயிர் நீ என்று..!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

நியாயமா?

Uncategorized இதில் அக்டோபர் 14, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

சில பொழுதுகள் மட்டுமே என்னுடன் இருந்து விட்டு
எத்தனையோ மாற்றங்களை தந்து..
அத்தனையும் ஏமாற்றமாய் விளைய விட்டது நியாயமா?

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

நினைவு

Uncategorized அடையாளங்களுடன் இதில் அக்டோபர் 14, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

உன் நினைவை விலக முடியாமல்
இறந்து போன என் இதயம் மீதேறி
காலம் பயணித்துக் கொண்டு இருக்கின்றது
புதுப் புது மாற்றங்களோடு..

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

ந‌ட்‌பி‌ல் தோ‌ல்‌வி

Uncategorized இதில் மே 17, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

எல்லோரும் அடைவது
காதல் தோல்விதான்
முதல் முறையாக
நான் அடைந்தேன்
நட்பில் தோல்வி!

என்னையும் நீயாக உணர்வாய்
என்று நான் நம்பினேன்
நீ பலவற்றை உணர்ந்தவ‌ள்
என்பதை அறியாமல்…

எனது நட்பின் ஆழம் அதிகம்
என நான் நம்பினேன்
உனது நட்பின் அகலம்
என்னவென்று அறியாமல்…

நான் யாரிடமிருந்தும்
சிரிப்பை பெற்றதில்லை…
எப்பொழுதும் சிரித்துக்
கொண்டே இருப்பதால்
அதில் எனக்கு பஞ்சமில்லை.

முதல் முறையாக உன்னிடமிருந்து
அழுகையை பெற்றேன்
அது என்னிடம் இல்லாமல்
இருந்ததால்…

நல்லதோ…
கெட்டதோ…
பிரிவின் சோகம்
என்பது எனக்கு மட்டும்தானே!

 

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

காதல்..!!

*! காதல் !* இதில் அக்டோபர் 27, 2007 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.
பதின் ஜந்து வயதுக்குழப்பத்தில் விளைவது
பருவத்தில் காதல் வரும்
பழக்கத்தில் காதல் வரும்
பார்த்தவுடன் காதல் வரும்
பார்க்காமலே காதல் வரும்
பள்ளியிலே காதல் வரும்
கல்லூரியில் காதல் வரும்
கவர்ச்சியில் காதல் வரும்
உணர்ச்சியில் காதல் வரும்
சாலையில் காதல் வரும்
சந்திப்பில் காதல் வரும்
கண் வழியே காதல் வரும்
காத்திருப்பில் காதல் வரும்
இளமையில் காதல் வரும்
முதுமையில் காதல் வரும்
நட்பிலும் காதல் வரும்
பகையிலும் காதல் வரும்
அழகிலே காதல் வரும்
அறிவிலே காதல் வரும்
நெருக்கத்தில் காதல் வரும்
விருப்பத்தில் காதல் வரும்
காதல் எங்கு தோன்றுமென்று
வேதத்திலும் சொல்லவில்லை
ஆகமங்களிலும் கூறவில்லை….!
ஆனால் பலவித வலியினை
மனதிற்குள் தருவது என்பது உறுதி….!!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

TRUE LOVE

*!TRUE LOVE!*, Uncategorized இதில் நவம்பர் 9, 2007 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

காலங்கள் தோறும் இது கதையாக போகும்
என் கண்ணிர் துளியில் ஈரம் வாழும்
நான் நானக இருந்திருபேன்
நீ நாமாக வாழ்வோம் என்றாய்
முடியாது என்று விலகினேன்
முடியும் என்று இணங்கினாய்
காதல் கொன்டேன் என் மீதுள்ள நம்பிகையால் அல்ல
உன் மீது உன் காதல் மேல் உள்ள நம்பிகையால் 

 இன்று  

முடியாது என்று கூறி சென்று விட்டாய்-ஆனல்
முடியதோ ஒரு போதும் என்று கூறி
தனிமையில் உன் நினைவுகளுடன்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
இதயம் வலிக்குதடி…!!!    

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

மனதில் நீ..!

*!மனதில் நீ!* இதில் நவம்பர் 9, 2007 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

என்னை இழக்கப் போகிறேன்
உன்னை இழக்க முடியாமல்..!

நீயாக வந்தாய்
நான் நீயாக மறினேன் 
நீயாக விலகுகிறாய்
முடியாதடி உன்னை பிரிய
அடுத்த நிமிடமும்..!

நான் வாழ்வது சந்தேகமடி உயிரே
இன்னுமொரு நிமிடம் நான் வாழ்வது 
நீ என்னிடம் வருவாய் மீண்டும் என்று
உயிரே உயிர் வாழ்கிறேன் உனக்காகவே…!

மறக்க என்னால் முடிந்து இருந்தால்
மாண்டு போக முயற்சித்திருப்பேனே
மூன்று முறை முயற்சி செய்தும் முடியவில்லை என்னால்
முடிவில்லா துக்கத்தை முழுசாக அடைவதற்கு
செயற்கையின் சாவை செய்யவே மாட்டேன்
செய்துள்ளேன் சத்தியம் இயற்கையின் இறப்பை
இதயத்தால் ஏற்பேன் இன்றாவது வருமென்று
இறைவனே உனக்கும் இந்த ஏழையை
இன்னுமா பிடிக்கவில்லை
உன்னிடம் வருவதற்கு உயிரொன்று ஏங்குது இங்கு..!

மனதில் நீ!
உயிரில் நீ…!
உதிரத்தில் நீ…!
எல்லாமே உன்னோடு…..!
என் மரணத்தை தவிர..!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

காத்திருப்பேன் என்றும் உனக்காக…!

*!காத்திருப்பேன் என் இதில் நவம்பர் 10, 2007 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

நீ சொன்ன
அந்த ஒரு
வார்த்தை
எனக்குப் போதுமடி
காத்திருப்பேன் என்றும்
உனக்காக!

நீ சொன்னாய்
எப்பவும் எனக்காய்
காத்திருப்பேன் என
நம்புகிறேன் உன்னை!!

இனி நீ வருடங்கள்
பேசாவிட்டாலும் உன்
அந்த ஓர்
வார்த்தையில் வாழ்வேன்
என்றாவது நீ சொன்ன
அந்த சேரும் நாள்
வரும் வரை..

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

காலமெல்லாம் நீ வேண்டும்..!!

*! காலமெல்லாம் !* இதில் நவம்பர் 10, 2007 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

காலமெல்லாம் நீ..வேண்டும்

என்னதான் இருக்கு உன்னிடம்
மீண்டும் மீண்டும்..சிந்தித்தால்
விடை தெரியவில்லை.
காரணம்…எதை என்று
சொல்வது
வாழ்க்கை ஒடும்போதும்
உன் நினைவுகள்தான்…
என் இதயத்துடிப்பில்
அதிகமாய் ஓடுகின்றது.
ஏன்…
என் நாடித்துடிப்பிலும் கூட
நீயே…தான் வாழ்கின்றாய்
சோகம் வாட்டும் போதும்.
ஓ… என்ன சோகம் என்கின்றாயா….?

உன்னை பிரிந்த சோகம்…
வாட்டும் போதும்.
உன் சுகமான நினைவுகள்
என்னை சுகமாக்கி…
செல்கின்றது.

என் செல்லமே..

இடை வெளி இல்லா..
மழை நீர்..போல்
என் வாழ்வில் நீ..வேண்டும்.

எப்பவும் எனக்கு சாலிக்காத..
பொருள்.. அது நீ..என்பதால்.
சலிப்பே…இல்லாமல்.
உன் இதழ் சிந்தும் கவிதையில்
காலமெல்லாம்.
நான் வாழ..என்னருகில்
நீ..வேண்டும்.

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

என் கடைசி ஆசை…!

*!என் கடைசி ஆசை!* இதில் டிசம்பர் 6, 2007 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

என் கடைசி ஆசை…!

நான் இறந்து விட்ட பிறகு..!

என் இதயத்தை எடுத்து இதயமே இல்லாத

என் காதலிக்கு கொடுங்கள்…!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

மனசு மட்டும்..!!

*! மனசு மட்டும் !* இதில் பெப்ரவரி 1, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

ஜன்னலில் பார்கிறேன்
காய்கிறது நிலவு
என்னையும் அங்கே
அழைகிறது உறவு

யாடைகள் செய்து
பார்கிறது விண்மீன்
யாரையோ இங்கே
தேடுறது கண்மீன்

மனசு மட்டும்
மாறவே இல்லையே
மறுபடியும் மறுபடியும்
உன்னையே கேட்கிறது

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

கரை சேரா கவிதைகள்…!!

*! கரை சேரா!* இதில் பெப்ரவரி 9, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

பக்கங்கள் கிறுக்குகிறேன் -
உன்னோடு பழகிய நினைவுகளை -
நினைவுகளை மீட்டுவதிலும்
தனி சுகம்

உன்னைப் பற்றி
நான் எழுதியவை
இன்னும் கரை சேரா
கவிதைகளாய்
தத்தளித்துக் கொண்டிருக்கின்றன..


என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

உன்னைத் தேடும் என் இதயம்..!!

*! இதயம் !*, Uncategorized இதில் பெப்ரவரி 9, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.
உன்னைத் தேடும் என் இதயம் தினம் கண்ணீர் வடிக்கின்றது
உன் எண்ணங்களை சுமந்த என் மனம் சோகங்களால் வாடி நிற்கிறது
ஒரு முறையாவது உன்னுடன் பேசக்கிடைக்காதா என்று – உன்
விழிகள் சந்திக்காத போதும் வார்த்தைகளாவது
எனை ஆறுதல்படுத்தாதா என.

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

காதலே …என் காதலே… !

*! என் காதலே !* இதில் பெப்ரவரி 15, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.
  தீர்க்கமாய் மறுக்கிறாய் நீ
  தாபமாய் தவிக்கறது மனது…  நீ சொல்லாமலே இருந்துவிடு
  நீ என்னைக்காதலிக்கிறாய் என்ற
  நினைப்பிலேயே இருந்துவிடுகிறேன்
  நீ சொல்லாமலே இரு….

  ஆம் அல்லது இல்லை
  என்பதை விட-உன்
  மெளனம் அழகாய் சொல்கிறது
  உன் காதலை…..

  வானம் நீர் தெளிக்க
  காகங்கள் பூபாளமிசைக்க
  நீ கோலமிட்டுக்கொண்டிருந்தாய்-
  என் கவிதை காட்சியாக்கப்பட்டது….

  நீ சொல்லாவிட்டாலும்
  ஊர் சொல்லும் நம் காதலை….

  என் கனவுக்குள் நீ
  உன் கண்களுக்குள் நான்
  நம் நடுவே காதல்
  யாருக்கும் புலப்படாமல்-
  பூவுக்குள் நுழையும் காற்றுபோல்…..

  காற்று இசையமைக்க
  பறவைகள் பாட்டிசைக்க
  மென்தூரலில் நாம் மரமொதுங்க…
  வானவில் பார்த்திருந்த அம் மாலையில்
  நீ காதலைச்சொன்னாய்
  உலகம் நிசப்தமானது…….
 

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

இதய வாசல் திறப்பாயா..!

*! இதய வாசல் !* இதில் ஏப்ரல் 4, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

என்னவளே ஏன்
என்னை மறந்தாய்
என் இனியவளே ஏன்
என்னை பிரிந்தாய்

எங்கிருந்தாலும்
நீ வாழ்கவென
வாழ்த்திட என்
உதடுகள் அசைந்தாலும்

உள்ளம் ஊமையாய்
தினமும் அழுகிறதே
உணர்வுகள் வெடித்து சிதற்கிறதே
உயிரும் விடை பெற துடிக்கிறதே

உறக்கம் மறந்து போனதே
இரக்கம் காட்ட மாட்டாயா
இதய வாசல் திறப்பாயா..? 

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com

விதி செய்த பாவம்

Uncategorized இதில் மே 6, 2008 இங்கே suthanx இவரால் இடப்பட்டது.

நான் செய்த பாவம்
உன்னை சந்தித்தது..!!
நீ செய்த பவம்
என்னை  நேசித்தது..!!
விதி செய்த பாவம்
விளையாடிப் பார்த்தது..!!

என்றும் காதலுடன் த.சுதன்.
suthan_tl@hotmail.com